1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 18 மே 2017 (20:36 IST)

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர் மின்னல் தாக்கி பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.


 


 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் ஆலங்காயம் நரசிங்கபுரம் திருவிழாவுக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கடும்ம் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் வழியில் இருந்த புளிய மரத்தடிய்ல் ஒதுங்கியுள்ளார்.
 
எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.