வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (18:23 IST)

கரூர் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா எழுநூற்று மங்கலம் கிராமத்தில் வசித்துவரும் தர்மதுரை(20) இவர் கொங்குநாடு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக காலையில் குளித்துவிட்டு ஈரத்துடன் வீட்டில் உள்ள மின்சார போர்டில் மின் சுவிட்சை இயக்கும்போது மின்சாரம் தாக்கி அங்கேயே விழுந்துள்ளார்.
 

 

மயங்கிய நிலையில் உள்ள தர்மதுரையை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த உடனே அவர் உயிர் பிரிந்தது. பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த் சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-சி.ஆனந்தகுமார்