ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (16:10 IST)

கிணற்றில் முழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

ஆர்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் கிணற்றில்  நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் மீது கற்கள் விழுந்து நீரில் முழ்கி இறந்த சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜகுப்பம் காலனியைச் சேர்ந்த  கூலித் தொழிலாளர்கள் ஜெயகுமார் மற்றும் ஆசைமுகம்.  அவர்களது மகன்கள் பிரதீப்(14), கிருஷ்ணகுமார்(14). இவர்கள் இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் அம்மையார் குப்பத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்ப்பு முடித்து வந்தனர்.
 
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் இருவரும் 10ஆம் வகுப்புக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். மாலை கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர்.
 
கிணற்றில் மின் மோட்டார் பைப் பிடித்துக் கொண்டு அவர்கள் நீச்சல் அடித்து கொண்டிருந்த போது, மின் மோட்டார் பக்கத்திலிருந்த கற்கள் மாணவர்கள் தலைமீது விழுத்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் நீரில் முழ்கினர். அப்போது  கிணற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்த சிலர் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் பலனின்றி இருவரும் இறந்தனர்.
 
பின்னர் பொது மக்கள் இறந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்கள் இருவர் நீரில் முழ்கி இறந்த சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி. ஆனந்தகுமார்.
செய்தியாளர் - கரூர் மாவட்டம்