வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (19:40 IST)

பாடகி சின்மயி கூறியுள்ள வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு அலசல் ....

உலக முழுவதும் மீடூ என்ற இயக்கம் பாலியல் ரீதியான துன்புறுத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புகார் தெரிவிக்கும் தளமாக இருக்கிறது. தற்போது இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவ்வியக்கம் செயல்பட்டுவருகிறது, குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள்  இந்த மீடூ தளத்தில் தங்கள் எந்த சூழலில் பாதிக்கப்பட்டோம் என்று மனம் விட்டு பதிவிடுகின்றனர்.
ஒருசிலர் தங்கள் பெயரைப்பதிவிட்டும் ஒருசிலர் பெயரைக் கூறாமலும் பிரபலமடைந்தவர்களின் மீது குற்றம் சாட்டை எடுத்து வைக்கின்றனர்.
 
இதில் தற்போது பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றம் சாட்டியிருப்பது திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்தநிலையில் சின்மயி  பல வருடங்களுக்க்கு பிறகு இந்த விவகாரத்தை கிளப்பியுள்ளது ஒருவேளை ஆண்டாள் குறித்து ஒரு நாளிதழில் கட்டுரை எழுதி வாசித்ததற்கான வைரமுத்து மீதான பழிவாங்களோ என தமிழ்நாட்டு அரசியல் நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.
 
இது குறித்து சிலர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று சிலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
 
இதற்கு வைரமுத்து கூறியதாவது :”அறியப்பட்டவர்களின் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கிலும் நாகரிகமாகி வருகிறது என தன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்து பதிவிட்டிருந்தார்.”
 
இது நடந்து சில நாட்கள் ஆன நிலையில் பாடலாசிரியர் தாமரை சின்மயிக்கு ஆதரவாகவும் அதே சமயம் வைரமுத்துவின் நெருங்கிய தோழரான சு.ப.வீரபாண்டியன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு நக்கலான பதிவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் தன் கருத்துக்களை தாமரை காரசாரமாக பதிவிட்டிருந்த பதிவையும் மறுநிமிடமே டெலிட் செய்தார்.
 
சின்மயி விவகாரத்தில்  ஊடகங்களூம் அடிகொருமுறை தொலைக்காட்சிகளிலும் ,பத்திரிக்கைகளிலும் அவர் பேசுவதை எல்லாம்  தொடர்ந்து அப்டேட் செய்து வருவதால் இதன் உண்மை தன்மையை அறிவதில் அனைவருக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழக  பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று பத்திரிக்கையாளார்களிடம் கூறியதாவது:
 
’நடிகர் எஸ்.வி.சேகர் மீது குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.’
 
மேலும் ஆறுமுறை தேசிய விருதுகள் வென்றவர். மிகச்சிறந்த படைப்பாளியாக வாழும் காலத்திலேயே கௌரவிக்கப்பட்டவர். பல படைப்புகளில் தன்னை நிலைநாட்டி தமிழன் புகழ் உயர்த்தியவர் இப்படியெல்லாம் சாதனை நிகழ்த்தியவருக்கு இந்த  வருடம் அவருக்கு போதாத காலமாகவே மாறிவிட்டது. இது நாள் வரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். குறிப்பாக தன்  நாற்பதாண்டு திரையுலகில் சம்பாதித்த பெயரை சின்மயி விவகாரம்  பெருமளவில் பாதிக்கச்செய்துவிட்டது.
 
இதை வேறொரு கோணத்தில் யோசிக்கையில் சாகித்ய அகாடமி முதற்கொண்டு பத்மஸ்ரீ விருதுகள் அனைத்தையும் வென்றவருக்கு அடுத்து  நம் நாட்டில் இலக்கிய விருதின் சிகரமாக கருதப்படும் இந்த 'ஞான பீட விருது' கிடைக்கக்கூடாது என்பதில் அவரது எதிராளிகள் ரசியமாக காய் நகர்த்தி வருகிறார்களோ என்ற சந்தேகமும் தமிழர்களின் மனதில் புயலென அடிக்கிறது.
 
அதே வேளை பாடகி சின்மயி கூறியுள்ள குற்றச்சாட்டையும் பொதுக்கண்ணோடு பார்க்கையில் அவர் தான் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளதையும் மறுக்க முடியாது.பெயர் கூற விரும்பாத  சில பெண்கள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டதையும்  சின்மயி தன் டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.  அப்படி பொய் புகார் கூற வேண்டிய  அவசியமும் அவருக்கு   இல்லை. ஏனெனில் தன் பாடல் வேலையை திறம் பட செய்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் பாடகி  சின்மயி.
 
இத்தனை சர்ச்சைகள் எழுந்த போதிலும் 'உண்மையை காலம் சொல்லும் 'என்று வைரமுத்து  சொன்னது போல சின்மயி குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருப்போம். நாளை சூரியன் கண் விழிக்கும். இரவு  விடியுமென நம்புவோம்.