1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 மே 2021 (17:03 IST)

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே
 
திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பதும் தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட அனைவரும் கிட்டத்தட்ட மாற்றப்பட்டு விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்/ தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனது தந்தைக்கு உதவிகரமாக இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்களையே தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிய தலைமை வழக்கறிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது