1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:06 IST)

ரிசல்ட் வருவதற்குள் வெளியே வந்துவிடுவேன்.. செய்தி சொல்லி அனுப்பினாரா செந்தில் பாலாஜி?

senthil balaji
தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் நான் வெளியே வந்து விடுவேன் என சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாகவே சிறையில் செந்தில் பாலாஜி உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி உடன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் ஆக உள்ள நிலையில் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியது அவரது மனதிற்கு ஆறுதலை அளித்துள்ளதாக தெரிகிறது 
 
மேலும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் சீக்கிரமே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் கரூருக்கு தேர்தல் பிரச்சாரம் சென்ற முதல்வர் மற்றும் உதயநிதி செந்தில் பாலாஜியை பாராட்டி பேசிய செய்தியும் அவரது காதிற்கு சென்றுள்ளதாகவும் அதனால் அவர் சிறையில் உற்சாகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தேர்தல் வேலையை நன்றாக செய்யுங்கள் தேர்தல் ரிசல்ட் வந்து வருவதற்குள் வந்து விடுவேன் என்று சிறையில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு செந்தில் பாலாஜி செய்தி அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதைத்தான் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டே திமுகவினருக்கு செய்தி அனுப்பி உள்ளார் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது,.
 
Edited by Mahendran