ஞாயிறு, 2 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 மார்ச் 2025 (12:57 IST)

வடிவேலு மேடை ஏறினால் போதும்.. திமுக ஊத்திக்கும்.. செல்லூர் ராஜு பேச்சு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மதுரை அருகே உள்ள புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

"கலைஞர் உயிரோடு இருந்தபோது, 2006 ஆம் ஆண்டு, திமுகவுக்காக வைகைப்புயல் வடிவேலு குரல் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், அப்போது திமுக வெற்றி பெறவில்லை.

ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில், திமுக தோல்வியை அந்த தேர்தலில் சந்தித்தது. தற்போது மீண்டும் நடிகர் வடிவேலு திமுகவுக்காக மேடையேறி இருக்கிறார். குஷ்பு பாஜகவுக்காக மேடையேறுகிறார். எனவே, அந்த கட்சிகள் கண்டிப்பாக 'ஊத்திக்கும்'. இது நூற்றுக்கு நூறு உண்மை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தர போறாரு’ என்ற பாடலை தேர்தலின்போது போட்டார்கள். ஆனால், இன்று முதலமைச்சரின் பிறந்த நாளில் கூட அந்த பாடலை போடவில்லை. ஏனென்றால், மக்கள் அனைவரும் கொதித்து போயிருக்கின்றனர். அனைத்து விதமான கட்டணங்களும் உயர்ந்து விட்டன. மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

Edited by Siva