1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (17:30 IST)

”இடைத்தேர்தலில் சசிகலா டெபாசிட் இழப்பார்” - காங். முன்னாள் தலைவர் சவால்

அதிமுக பொதுச்செயலாளார் சசிகலா இடைத்தேர்தலில் சசிகலா டெபாசிட் பெறுவதே கடினம். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சவால் விடுத்துள்ளார்.


 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை குழு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சசிகலா முதலமைச்சராக தேர்வாகியது உறுதியாகியுள்ளது.

இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்தார். இதன் மூலம் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எப்போது பதவியேற்றுக் கொள்வார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்துக் கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனியார் தொலக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,”தமிழக வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். மக்கள் சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. இடைத்தேர்தலில் சசிகலா டெபாசிட் பெறுவதே கடினம். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.