வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (18:05 IST)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் களமிறங்கிய சரத்குமார்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சுமார் 50 நாட்களாக விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருவதால் போராட்டத்தின் வீரியம் தாங்காமல் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். போராட்டக்காரர்களிடம் தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமின்றி அங்கிருந்த மாசடைந்த தண்ணீரையும் சரத்குமார் குடித்தார்.

இதுகுறித்து சரத்குமார் தனதூ டுவிட்டரில் கூறியதாவது: 48 வது நாளாக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.