வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:48 IST)

ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்தை முடித்தவுடன் சபரீசன் செய்யும் வேலை.. திமுகவினர் கலக்கம்..!

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்களோ அவர்கள் பிரச்சாரத்தை கொடுத்தவுடன் அந்த தொகுதிக்கு சபரீசன் சென்று கள ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இருவரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து முடித்து விட்ட நிலையில் தற்போது சபரீசன் கள ஆய்வுக்காக தமிழகம் முழுவதும் சென்று வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்த இடத்தில் திமுகவினர் எப்படி வேலை செய்கின்றனர்? கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறதா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பதை எல்லாம் அவர் நேரடியாக சென்று கணித்து வருகிறாராம்.
இதனால் திமுக நிர்வாகிகள் கலக்கமாக இருப்பதாகவும் தங்களைப் பற்றி ஏதாவது யாராவது போட்டு கொடுத்து விட்டால் தங்கள் பதவிக்கே வேட்டு வந்து விடும் என்றும் பொறுப்பாக பணி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கொங்கு மண்டலத்தை தான் சபரீசன் முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் அங்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva