திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2016 (19:43 IST)

ஜெ. பற்றிய வதந்தி - அரைக் கம்பத்தில் பறந்து மீண்டும் ஏற்றப்பட்ட கட்சிக் கொடி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி வெளியான தவறான தகவல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 
 
மேலும், அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததாக இன்று மாலையில் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து தவறான வதந்திகளை சில தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியைடந்தனர். மேலும், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள கம்பத்தில், அதிமுக கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
 
ஆனால், அப்படி வெளியான செய்திகள் வதந்தி என்றும், முதல்வருக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கட்சிக் கொடி மீண்டும் மேலே ஏற்றப்பட்டது.