தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய வசதிகள்: ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் 381 கோடி செலவில் புதிய வசதிகள் செய்து தரப்படும் என விமான துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய ஓடு பாதை அமைத்தல், புதிய கட்டிடம் கட்டுதல், தொழில்நுட்ப பிரிவு அமைத்தல், கட்டுப்பாட்டு கோபுரம் அமைத்தல், புதிய தீயணைப்பு நிலையம் அமைத்தல் ஆகியவைகளுக்கு ரூபாய் 381 கோடி செலவு செய்யப்படும் என அறிவித்துள்ளது
தினமும் 6000 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருக்கும் என்றும் இரண்டு மேம்பாலங்கள் கார் நிறுத்தும் வசதி உள்பட அனைத்து நவீன வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது
இந்த அறிவிப்பு தூத்துக்குடி பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது