செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (09:47 IST)

உலகளாவிய ஒருமைப்பாட்டில் சனாதனம் முக்கியமானது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் மிகவும் முக்கியமானது என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரே பாரதம் உன்னத பாரதம் - யுவ சங்கமம் என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி என்று பேசினார். அதில் அவர் நமது பண்டிகைகள் நடனங்கள் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் தான் இருக்கின்றன என்று தெரிவித்தார். 
 
மேலும் உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் நாகர்கோவிலில் நடந்த தோல் சீலை  போராட்ட நிகழ்ச்சிய்ல் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களை இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு என்றும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படை எடுப்புகளால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டு விட்டது என்றும் மதம் ஜாதி சாஸ்திர சம்பிரதாய புராணங்களின் பெயரால் ஆணுக்குப் பெண் அடிமை என ஆக்கிவிட்டார்கள் என்றும் சூத்திரர்களையும் பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு தான் என்றும் பேசி உள்ளார்.
 
Edited by Siva