வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (10:32 IST)

சுவாதியை கொலை செய்துவிட்டு கேரளாவுக்கு சென்ற ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த குற்றவாளி ராம்குமார் கைதேர்ந்த கூலிப்படை கொலையாளி போல் செயல்பட்டது தெரியவந்துள்ளது.


 
 
பொதுவாக கோபத்திலும், ஆத்திரத்திலும் கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதிகமாக யோசிக்காமல் பல தடயங்களை விட்டு சென்று விடுவார்கள். இல்லையெனில் பயத்தில் காவல் நிலையத்தில் போய் சரணடைந்து விடுவார்கள்.
 
ஆனால் சுவாதியை கொலை செய்த ராம்குமார் ஒரு கைதேர்ந்த கூலிப்படை கொலையாளியை போல் செயல்பட்டுள்ளான். சுவாதியை கொலை செய்து விட்டு காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சொந்த ஊருக்கு அவன் தப்பித்து சென்ற விதம் ஆச்சரியமளிக்கிறது.
 
சுவாதியை கொலை செய்துவிட்டு இரண்டு நாள் மேன்சனில் இருந்த ராம்குமார், விடுதி அறையில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு காவல்துறையின் கண்ணில் படாமல் சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
 
பஸ்சில் ஊருக்கு சென்றால் காவல்துறையிடம் மாட்டிவிடுவோம் என்பதால் கேரளா வழியாக கொல்லம் வந்து, பின்னர் அங்கிருந்து செங்கோட்டைக்கு வந்து விடலாம் என கணக்கு போட்டுள்ளார் ராம்குமார்.
 
அதன் படி சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு டிக்கெட் எடுத்து ரெயிலில் கொல்லம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புனலூர், செங்கோட்டை வழியாக பஸ்சில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் ராம்குமார்.