1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (23:19 IST)

ரஜினி முதல்வர், கமல் துணை முதல்வர்: எஸ்.வி.சேகர் கருத்து

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி உதயமாக வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் மனதில் ஒரு எண்ணம் எழுந்துள்ள நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்



 
 
ரஜினி தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கட்டும், அந்த கட்சியில் கமல்ஹாசனும் சேர வேண்டும். வெற்றி பெற்றவுடன் ரஜினி முதலமைச்சராகவும், கமல் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும்
 
இந்த கூட்டணியில் அஜித், விஜய்யையும் சேர்த்து கொள்ளலாம். சினிமா நடிகர்கள் சரியான முறையில் ஆட்சி செய்வாரகள் என்பதை நிரூபிக்கட்டும். 
 
யார் அரசியலுக்கு வரவேண்டும், வரக்கூடாது என்று தீர்மானிப்பது ஓட்டு போடும் மக்கள் தானே தவிர, எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரோ, மாவட்ட செயலாளரோ தீர்மானிக்க முடியாது.