ஒரு வழியாக துவங்கிய வடகிழக்கு பருவமழை: ஹேப்பியான மக்கள்
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கிய நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்பொழுது மழை பெய்து வருகிறது.
வழக்கமாக அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்க வேண்டும். கடந்த 26 ஆம் தேதி மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்பொழுதும் மழை வரவில்லை.
வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால், சில நாட்கள் தாமதமாக நவம்பர் முதல் வாரத்தில் துவங்குவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன் டிரெய்லராக இரண்டு நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வந்தது
நவம்பர் 1 ந் தேதியான இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், திநகர், சேத்துப்பட்டு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையால் மக்கள் சந்தோஷப்பட்டாலும், ஆபிஸுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.