திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (18:21 IST)

அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில்  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் இந்த மாதமும் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்வதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran