திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (07:38 IST)

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
கன மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னைக்கு உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம்  ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva