செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:29 IST)

உக்ரைன் போர்: புதுவை மாணவர்களை மீட்க முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும், உக்ரைனில் சிக்கியுள்ள கேரள மாநில மாணவர்களை மீட்க வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 
 
இது குறித்து அவர் அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியாவின் தூதர் பார்த்தசாரதி அவர்களை தொடர்புகொண்டு உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்கள் பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.