செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (22:49 IST)

நெடுவாசல் போராட்டம் திடீர் நிறுத்தம். காரணம் என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கும் மேல் நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்  பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த திட்டம் நிறைவேற தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் மீண்டும் திட்டத்தை தொடங்க முயற்சித்தால் போராட்டத்தையும் தொடருவோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றதை அடுத்து கோட்டைக்காடு மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும்  போராட்டத்தில் களத்தில் இருந்து அமைதியாக வெளியேறியுள்ளனர்.