பாம்புக்கு பதில் பிஸ்டல்: பஸ்சில் சீட் பிடிக்க போலீஸின் பலே ஐடியா
குன்னூரில் போலீஸ்காரர் ஒருவர் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக, பஸ்சின் சீட்டில் துப்பாக்கியை போட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீபாவளி நெருங்குவதால் எங்கே பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில், பஸ் என அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் நேற்று குன்னூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு வந்த பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மக்கள் பேருந்தை நோக்கி முந்தியடித்துக் கொண்டு ஓடினர்.
அப்போது 2 போலீஸ்காரர்கள் பேருந்தில் இடம் பிடிக்க ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தனர். இதனால் பயணிகள் கடும் பயத்திற்கு ஆளானார்கள். இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.