தடையை மீறி சுற்றும் மக்கள் : தமிழகத்தில் 4100 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் பொருட்கள் வாங்குவதாக கூறி சாலைகளில் தொடர்ந்து நடமாடி வருவது போலீஸாருக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து போலீஸார் கெஞ்சி கேட்டும், அடித்து விரட்டியும் கூட மக்கள் வீடுகளில் அடங்க மறுப்பதாய் கூறப்படுகிறது. இதனால் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ள போலீஸார் ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 4,100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தண்ட தொகை அல்லது குறைந்த பட்ச சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் இருக்க தொடர்ந்து போலீஸார் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.