சூரி, விமல் மீது பாய்கிறதா கைது நடவடிக்கை??
நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சற்றுமும் தகவல் கிடைத்துள்ளது.
நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் தடையை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு அங்குள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளுகுத் தடைவிதிகப்படுள்ள நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் விமர் ஆகிய இருவரும் அங்குள்ள பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அங்கு இருவரும் மீன் பிடித்தது தெரியவந்தது. எனவே இருவருக்கும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டது. மேலும், அவர்கள் இருவருக்கும் தடையை மீறி உதவி செய்ததாக 3 வனத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தற்போது பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறியதாக விமல் மற்றும் சூரி மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். எனவே அடுத்த என்னவென்பது விரைவில் தெரியவரும்.