திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:27 IST)

ஓவியா செய்ததை ஆரவ் செய்திருந்தால்? - கவிஞர் தாமரை அதிரடி

பிக்பஸ் நிகழ்ச்சியில், வெளிப்படையான நபர் எனக் கூறிக்கொண்டு, ஆரவை துரத்தி துரத்தி தொல்லை கொடுக்கும் ஓவியாவின் செயல்பாடு மிக மட்டமாக இருக்கிறது என கவிஞர் தாமரை கருத்து தெரிவித்துள்ளார்.


.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஓவியா-ஆரவ் காதல் விவகாரங்களே அதிகம் காட்டப்படுகிறது. ஆரவை தான் நேசிப்பதாக கூறிய ஓவியா, அவரை சுற்றி சுற்றி வந்தார். அவர் எங்கு சென்றாலும் அங்கு சென்று அவரிடம் குழைந்தார். அருகினில் யார் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அவரிடம் காதல் ரசம் சொட்ட சொட்ட நடந்து கொண்டார். 
 
இந்த விவகாரத்தால் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டும் பாதிக்கும் எனக் கூறிய ஆரவ், ஓவியாவை தவிர்ப்பது போலவே நடந்து கொண்டார். 


 

 
இந்நிலையில், முகநூலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அலசி எழுதும் சுரேஷ் கண்ணன், ஓவியா பற்றி எழுதியிருந்த பதிவிற்கு கவிஞர் தாமரை கருத்து பதிவு செய்துள்ளார். அதில் “ ஒரு ஆணை பாலியல் சீண்டல் செய்கிறார் ஓவியா. அதுவே ஒரு ஆண் செய்திருந்தால் வேறு மாதிரி பேசுவார்கள். ஓவியாவின் செயல்கள் மகா மட்டம். இது டாஸ்க் ஒன்றுமில்லை. ஓவியா உண்மையிலேயே அப்படித்தான் நடந்து கொள்கிறார். பரணி இருக்கும் போது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கொதித்து எழுந்த ஆண்கள், தற்போது ஓவியாவால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறாமல் இருப்பது அவர்களின் பெருந்தன்மை” எனக்  குறிப்பிட்டுள்ளார்.
 
மேலு, ஒருவரை பிடித்துவிட்டது என்பதாலேயே, அவர் செய்யும் அனைத்தையும் ரசிக்கவும், நியாயப்படுத்துவதும் செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது. ஓவியாவின் செயல்களைக் கண்டு காயத்ரி, சக்தி ஆகியோர் கோபமடைவது மிகமிக நியாயமனவையே” எனக் குறிப்பிட்டுள்ளார்.