திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (00:08 IST)

முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு: பாமகவின் அடுத்த அஸ்திரம்

முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்ற கோஷத்தை பாமக  தற்போது கையில் எடுத்துள்ளது.
 

 
பாமக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் நலன் சார்ந்த அறிக்கை, செய்தியாளர்கள் சந்திப்பு, பொதுக் கூட்டம், மாநாடு என தினசரி அரசியல் நடவடிக்கைகளில் பாமக அதிக அளவில் ஈடுபாடு காட்டி வருகின்றது.
 
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், மதுவிலக்கை மையப்படுத்தி, பாமக தனது அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதே அந்த புதிய கோஷம்.
 
இந்த புதிய வாசகத்தையும், புதிய கோஷத்தையும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும், அவரது கட்சியினரும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவைகள் மூலம் பிரமோட் செய்து வருகின்றனர்.
 
ஆனால், சமீபத்தில், சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆதரவு மையம் நடத்திய கருத்துக்கணிப்பில், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு 5 வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.