1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , திங்கள், 20 மே 2024 (18:29 IST)

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையினரும் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட துவங்க உள்ளனர்.
 
கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி முதல் கட்டமாக கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில்  500 மரக்கன்றுகளை நடும்  விழா நடைபெற்றது.
 
இதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவதை துவங்கி வைத்தனர்.
 
ஆயுதப்படை கவாத்து மைதானம் வளாகத்தில் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்று,களை  500-க்கும் மேற்பட்ட காவலர்கள் கையில்  ஏந்தி மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம் என காவல் ஆணையர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 
தொடர்ந்து, அங்கிருந்த காவலர்கள் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,துணை ஆணையர் சரவணன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோருடன்   காவல்துறையினர் ஆயுதப்படை மைதான வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர்.