ரு.100 எட்டிப்பிடிக்க போகும் பெட்ரோல்: மும்பைவாசிகள் வேதனை!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்காததன் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.88.07 விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.80.90 என்ற விலையில் விற்பனையாகிறது.
இதனிடையே டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல் -டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்துள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.85.45 ஆக அதிகரித்துள்ளது. டீசலில் விலை ரூ. 75.63 ஆக உள்ளது.
இதே போல மும்பையிலும் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூ. 92.04 என்ற அளவை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.