1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:21 IST)

பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிகிறது! தமிழக அரசு அவசர பரிசீலனை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தந்தையின் உடல்நிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஒருமாத பரோலில் விடுதலையானார். அவருடைய பரோல் தேதி செப்டம்பர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட பரோலும் இன்றுடன் முடிவடைவதால் அவர் சிறை திரும்ப வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பேரறிவாளனின் தந்தை இன்னும் சிகிச்சை பெற்று வருவதால் மேலும் ஒரு மாதம் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து அற்புதம்மாள் மனு கொடுத்துள்ளார்
 
இன்று பேரறிவாளனின் பரோல் முடிவடையவுள்ள நிலையில் அற்புதம்மாளின் மனு குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.