செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (09:41 IST)

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை..! தேதி அறிவிப்பு..!

indian ship
நாகையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு பயணிகள் கப்பல் விடப்பட்டு ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நாகையிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால் மழை காரணமாக இந்த கப்பல் சேவை ஒரே வாரத்தில் ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகையிலிருந்து இலங்கையின் காங்கேயம் துறைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை - இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் மே 13ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva