செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (14:52 IST)

எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை நடவடிக்கைகளை சில தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்த உத்தரவில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு அனுமதி அளிக்கும் வரை சேர்க்கக்கூடாது என்று கூறியிருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்றும் மீறி நடந்தால் அந்த பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது