திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:51 IST)

அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை இல்லை..! – தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Chennai Rain
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் அடுத்த சில நாட்களுக்கான மழை அப்டேட்டை அளித்துள்ளார்.



டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மழை வெள்ளத்தை சந்தித்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் பெய்த எதிர்பாராத அதிகனமழை ஊரை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.

தற்போது மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில் மழை கொண்டாட்டங்களை கெடுக்க கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களுக்கான மழைப்பொழிவு குறித்து கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் என்னும் ப்ரதீப் ஜான் அடுத்த ஒருவாரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K