செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மே 2024 (12:10 IST)

அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை: போக்குவரத்து துறை

அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்றும்,  வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
 
நெல்லை நாங்குநேரி அருகே, டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மேலும் நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
போக்குவரத்து துறையின் விதிமுறையின்படி வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல் துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran