செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 மார்ச் 2018 (15:59 IST)

மற்றவர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்த நிஷா...

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ மளமளவென பரவிய போது, நிஷா என்ற பெண் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களை காப்பாற்றிவிட்டு தீயில் சிக்கி மரணமடைந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

 
சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் தமிழ் ஒளி என்பவரின் மகள் நிஷா. இவர் ஐ.டி. துறையில் பணிபுரிந்து வந்தார். அதோடு, மலையேறுவது, மராத்தானில் பங்கேற்பது, சுற்றுலா செல்வது ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் மனதநேயம் மிக்கவராகவும் அவர் இருந்துள்ளார். 
 
சமீபத்தில் பலரை தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் ஏற்பாடு செய்த சென்னை டிரெக்கிங் கிளப்பில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி, குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் செல்ல அந்த நிறுவனம் அறிவித்ததையடுத்து நிஷாவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். மேலும், அனைவரையும் ஒருங்கிணைத்து நிஷாதான் அழைத்து சென்றுள்ளார்.
 
அப்போதுதான் அவர்கள் இருந்த பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதைக்கண்ட நிஷா மற்றவர்களை காப்பாற்ற முயற்சிகள் எடுத்துள்ளார். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட போதிலும் ஆம்புலன்சை தொடர்பு கொண்டு தகவல் கூறியிருக்கிறார். ஆனால், காட்டுதீயில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிஷா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 
அதையடுத்து, நிஷாவின் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிக்கு அவரின் உடல் எடுத்து செல்லப்பட்டது.