குரங்கணி தீ விபத்து : மரணமடைந்த 9 பேரின் விபரம்
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு பிரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர்.
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். அதில் 6 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில், விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அதேபோல், அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் இறந்தவர்களின் உடல்கல் மீட்கப்பட்டு வருகிறது.