புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (17:09 IST)

நாகர்கோவில் காசி தந்தை கைது: சிபிசிஐடி அதிரடி

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக பாலியல் புகாருக்கு உள்ளான நாகர்கோவில் காசி சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவருடைய லேப்டாப்பை ஆய்வு செய்த போது பள்ளி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை பல பெண்கள் அவருடைய காதல் வலையில் விழுந்து உள்ளதாகவும் ஒரு சிலர் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரியவந்தது 
 
இதனை அடுத்து காசிக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காசியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது காசியின் தந்தை தங்கபாண்டியன் தனது மகனின் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பான தடயங்களை அழித்ததாகவும், இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மகனுக்கு நல்ல அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்த வேண்டிய தந்தையே மகனின் குற்றங்களுக்கு துணை போனதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது