புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (08:13 IST)

இந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு! – ஆனாலும் சிறு நிம்மதி?

மாதம்தோறும் சமையல் சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதத்திற்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலையில் ரூ.105 உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.105 விலை உயர்ந்து ரூ.2,145க்கு விற்கப்பட உள்ளது. ஆனால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரில் விலை ஏற்றம் ஏதும் இல்லாமல் முந்தைய விலையான ரூ.915க்கு விற்கப்படுவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.