சென்னையில் ஒரே நாளில் ரூ.73, 300 அபராதம் வசூல்!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரு நாள் நடத்திய ஆய்வில் மட்டும், 73, 300 ரூபாய் அபராதம் வசூல்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரு நாள் நடத்திய ஆய்வில் மட்டும், 73, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10,400 ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் 9,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.