குறையும் கொரோனா; மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு? – நாளை முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து நாளை முக்கிய அதிகாரிகளோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகளை பொறுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் அமலில் உள்ளன.
இந்த வாரம் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் இதே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா அல்லது புதிய தளர்வுகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 11 மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.