செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (15:31 IST)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை! – சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை இணைப்பதற்கான சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.



கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயம் அதிகம் நடைபெறும் டெல்டா பாசன பகுதிகளில் ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ஆய்வுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதை தடை செய்யும் வகையில் விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டுமென கூறப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் மயிலாடுதுறையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைப்பதற்கான சட்ட முன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மயிலாடுதுறையிலும் இனி ஷெல், ஹைட்ரோகார்பன், விவசாயம் அல்லாத பணிகளுக்கான துளையிடுதல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிறுவ முடியாது என்பது குறிப்பிட தக்கது.

Edit by Prasanth.K