வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:07 IST)

இயற்கையோடு இணைந்திடும் மங்கையர் மசாலாவினை உருவாக்கும் மங்கையர்கள்

கரூர் மாவட்டத்தில் வணிகம் தான் மிகவும் பேமஸ், இந்நிலையில் பஸ்பாடி, கொசுவலை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழில்களை தொடர்ந்து ஒரு பெண் ஒருவரது முயற்சியால் அந்த பெண் தயாரிக்கும் சுமார் 44 க்கும் மேற்பட்ட மசாலாக்கள் தற்போது தமிழக அளவில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.



கரூர் அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ரேவதி, இவரது கணவர் கோபால், இத்தம்பதியினர் கடந்த சில 6 மாதங்களுக்கு முன்னர் சாதாரண குடிசைத்தொழிலாக மசலா பொருள்களை தயாரித்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, தமிழக அளவில் மற்ற விளம்பர கம்பெனிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையாகின்றது. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இட்லி பொடி, மிளகு பொடி, சீரகம் பொடி, மல்லிப்பொடி உள்ளிட்ட சுமார் 44 க்கும் மேற்பட்ட மசாலாக்களை பெண்களை கொண்டே தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் உதவியாளராக ரேவதியின் கணவர் கோபாலும் உதவிக்கரம் நீட்டி அவ்வப்போது மசலா தயாரிப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்.

இந்நிலையில், ஏற்கனவே, குடிசைத்தொழில் புரிந்து வந்த ரேவதி தற்போது கணவரின் தயவால், பெரிய பெரிய நவீன மிஷின்களை வாங்கி, மூலப்பொருட்களான மிளாகாய்களை வறுப்பதற்கு ஒரு இயந்திரம், மல்லியை வறுப்பதற்கு ஒரு இயந்திரம் என்று தனித்தனியாக இயந்திரங்கள் கொண்டு கலப்படம் இல்லாமல் மிகவும் தரம் வாய்ந்த பொருட்களை தயாரித்து அதனை பாக்கெட் போட்டு விற்கின்றனர். ஏற்கனவே குடும்பத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மசலாக்கள், அந்த சுவையை மற்றவரும் உணர்ந்ததால், ஏராளமானோர் இந்த மங்கையர் மசலாக்களை விரும்பி சாப்பிடுவதால் கரூர் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளில் தனியாக மங்கையர் மசாலா என்கின்ற ஷாப்பிங் ஹால்களையும் உருவாக்கி அதில் இயற்கை முறைப்படி எந்த வித கலப்படம் இல்லாத இந்த மசாலாக்களை நுகர்வோர்கள் முன்னர் கண்ணாடி ஜாரில் வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய எடையில் அதாவது 50 கிராம் முதல் கிலோ கணக்கு வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், ஆர்டரின் பேரில் மசாலாக்களை தயாரித்து கொடுக்கும் இந்த பெண்கள் தயாரிக்கும் மங்கையர் மசாலாவிற்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் பேர் சொல்லும் அளவிற்கு பெண்கள் பெயரெடுப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எந்தெந்த பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றதோ, அந்த இடத்திற்கே தனது (ரேவதியின்) கணவர் கோபால் வாங்கி வந்து அதை சிறப்பான முறையில் வெளி மாநில அளவில் உள்நாட்டு ஏற்றுமதியிலும் ஒரு கால்பதிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள இந்த மங்கையர் மசாலா கரூர் மாவட்ட அளவில் ஒரு கலக்கு கலக்குகின்றது. மக்களின் ஆதரவே இதற்கு மூலக்காரணம் என்கின்றார் ரேவதியின் கணவர் கோபால், மேலும், ஆங்காங்கே ஆர்டர்கள் ஒரு புறம் குவியும் நிலையில் அவர்களது கரூர், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் உள்ள ஷாப்பிங் ஹாலிலும் விற்பனை ஜோராக நடக்கின்றது.


சி.ஆனந்தகுமார்