விவசாயிகளுக்கு புது மானியம்… மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு!

Last Updated: சனி, 16 ஜனவரி 2021 (16:13 IST)

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை சார்பாக விவசாயிகளுக்கு புது மான்யம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். இன்று காணும் பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கான மான்யத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதில் ‘ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவிற்குத் தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது என்கிறது புறநானூறு. வேளாண்மை எனும் சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும் 'பெர்சனலைஸ்டு மானியம்' மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :