ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (17:19 IST)

ம.ந.கூ. தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார்களா? - அர்ஜூன் சம்பத் சர்ச்சை கருத்து

மக்கள் நல கூட்டணியினர் எதிர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.


 

சிவகங்கையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ”இந்து இயக்க நிர்வாகிகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடப்படுகிறது. எனவே அரசு இந்து இயக்க நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பினை தரவேண்டும்.

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் - போலீசார் மோதலில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்திட வேண்டும்.

இதில் மக்கள் நல கூட்டணியினர் எதிர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.