”மஹா”வால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை..
அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் வலுவான புயலாக மாறக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே “க்யார்” என்னும் புயல் உருவாகியுள்ள நிலையில், தற்போது கேரளாவிலிருந்து 300 கிமி தொலைவில் உருவாகியுள்ள ”மஹா” புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ”மஹா” புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா என பலரும் அச்சம் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது ”மஹா” புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.