திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:01 IST)

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பது மட்டுமின்றி தினமும் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
நேற்று சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம், திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது