காபி 25 ரூபாய்; தடுப்பூசி போட்டிருந்தா 1 ரூபாய்தான்! – கவனம் ஈர்க்கும் மதுராந்தகம் காபி ஷாப்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரூ.1க்கு பில்டர் காபி என காபி ஷாப் ஒன்று அறிவித்துள்ளது வைரலாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க பலரும் தனிப்பட்ட வகையில் பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.
அப்படியாக மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதர் காபி ஷாப் அறிவித்துள்ள சலுகை கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ரூ.25க்கு விற்கப்படும் பில்டர் காஃபி கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டுபவர்களுக்கு ரூ.1 ரூபாய்க்கு வழங்கப்படும் என காபி ஷாப் உரிமையாளர் முரளி அறிவித்துள்ளார். இவ்வாறு கிடைக்கும் தொகையை திரட்டி கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.