வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2024 (11:08 IST)

ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Rain
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நகராமல் ஒரே இடத்தில் நின்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கிய நிலையில், அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தகுதி பகுதியாக வலுவடைந்தது.
 
இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பல மணி நேரமாக ஒரே இடத்தில் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும், டிசம்பர் 24 ஆம் தேதி வரை இந்த மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு நின்று கொண்டிருப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நகரத் தொடங்கினால் தான் அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பது குறித்து கணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran