செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandhakumar
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (21:31 IST)

மாட்டு வண்டி மீது லாரி மோதி விபத்து: மாடுகள் பலி

மாட்டு வண்டி மீது லாரி மோதி விபத்து: மாடுகள் பலி

மணல் ஏற்றி வந்த இரண்டுமாட்டு வண்டிகள் மீது கிரைனைட் ஏற்றி வந்த லாரி மோதி  இருவர் பலி  இரண்டு மாடுகள் உயிரிழந்தனர்.


 


கரூர்  அடுத்த சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையில்   கொடையூரை சேர்ந்த  அருள் என்பவரும், தூளிநாயக்கனூரை சேர்ந்த  பதினோரம் வகுப்பு மாணவன் பூபதியும் தங்கள் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த கிரைனைட் கல் ஏற்றி வந்த லாரி வேகமாக மோதி பள்ளத்தில் பாய்ந்தது.  மோதிய வேகத்தில் மணல் வண்டிகள் தூள் தூளனது.

மாட்டு வண்டிகளில் இருந்த  அருள் மற்றும் பூபதி  சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர்.  மாடுகள் இரண்டு உயிரழந்தது இரண்டு மாடுகள் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.

காலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறை கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பெரியய்யா தலைமையில் பசுபதிபாளையம் காவல்துறையினர் இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.