1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (19:34 IST)

மாசிமகம் திருவிழாவை ஒட்டி 16ம் தேதி விடுமுறை

மாசிமகம் திருவிழாவை ஒட்டி 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
 
இதனைத்தொடர்ந்து தற்போது மாசிமகம் திருவிழாவை ஒட்டி 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளுக்கும் 16ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்புக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு 16ம் தேதி நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.