வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 ஜனவரி 2022 (19:39 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: அது குறித்த விபரங்கள் இதோ:
 
பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.17,000 வரை செலவு செய்யலாம்.
 
முதல் மற்றும் 2-ம் நிலை நகராட்சிகளில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.34,000 வரை செலவு செய்யலாம்.
 
தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் வேட்பாளர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்.
 
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்.
 
சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம்.
 
தேர்தல் செலவின கணக்குகளை பிப்.22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.