செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (20:18 IST)

’’நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம்!‘’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanithi
’’நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம்!‘’என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

`நீட் விலக்கு - நம் இலக்கு’ எனும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு மிகப்பெரிய ஆதரவை தமிழ்நாட்டு மக்களும் - மாணவர்களும் அளித்து வருகின்றனர். இந்தக் கையெழுத்து இயக்கத்தை இன்னும் வேகமாகவும் - மாபெரும் மக்கள் இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்காக தி.மு.கழகத்தின் அனைத்து அணிகளின் செயலாளர்கள், தலைவர்கள், துணை - இணைச் செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று பங்கேற்றோம். கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஒவ்வோர் அணியும், எந்தெந்த வகையில் மேற்கொள்வது என்ற செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தோம். நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம்!